சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவித்த அவர், சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், சிறுவர் தொடர்பில் குற்றமிழைப்போருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.