WhatsApp இல் குரல்வழி அழைப்பு வசதி

WhatsApp-Voice-Calling
நீண்ட காலமாக WhatsApp-ல் குரல்வழி அழைப்பு வசதி தரப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது WhatsApp-ல் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதி சில பயனர்களின் அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த ஸ்கிரீன் ஷாட்டின்படி முன்னைய WhatsApp இனை விடவும் வித்தியாசமான பயனர் இடைமுகத்தினை கொண்டமையும், Calls, Texts மற்றும் Contacts டேப்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் தெளிவாக தெரிகின்றது.