பள்ளி மாணவர்களுக்கான புதிய மென்பொருள்கள்

பல்வேறு தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ப, உலகில் உள்ள சகல மென்பொருள் நிறுவனங்களும் நாளுக்கு நாள் புதிய மென்பொருள்களை தயாரித்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சிறுவர்கள், மாணவர்களுக்கான மென்பொருள்களும் சிறப்பிடத்தை வகிக்கின்றன. தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கான புதிய மென்பொருள்கள் சில உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டக்ஸ் பெய்ன்ட் (Dux Paint) எனப்படும் மென்பொருளானது, 3 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் படம் வரைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.

ஸ்க்ராட்ச் (Scratch) மென்பெருள் என்பது, ஒரு நிகழ்வு சார்ந்த நிரலாக்க மொழியாகும். இதன்மூலம் ஒருவருக்கு தேவையான முறையில் அசைவூட்டும் படங்கள் மற்றும் கதைகளை உருவாக்க முடியும். மேலும் தாம் உருவாக்கியவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

மற்றுமொரு மென்பொருளான ஸ்டெல்லேரியம் (Stellarium), வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை கன்டறிவதற்கு பயன்படுத்தப்படும். இது கற்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிம்ப் (Gimp) எனப்படும் மென்பொருள், அடோப் போட்டோஷொப் மென்பொருளை ஒத்த மென்பொருளாகும். இதன் மூலம் பலவகையான கிராபிக்களை எளிதாக செய்ய முடிகின்றது.

பள்ளி மாணவர்களுக்கான புதிய மென்பொருள்கள்