வாலுடன் பிறந்த சிறுவன்

பஞ்சாப்பை சேர்ந்த ஆர்சித் அலிகான் என்ற 13 வயது சிறுவனுக்கு, பிறக்கும் போது வால் இருந்ததை கண்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்துக்களின் கடவுளாக வணங்கப்டும் அனுமனுக்கு வால் இருப்பது போல் சிறுவனக்கும் வால் இருந்ததால் தெய்வத்தன்மை வாய்ந்த குழந்தை என அவனது வீட்டின் அருகே வசிக்கும் மக்கள் அவனை வணங்கி வந்தனர்.

மேலும், சிறுவனுக்கு வால் இருந்ததால் அவனால் நடக்க முடியாமலும், படுக்கமுடியாமல் அவதிப்பட்டதாக அவனது தாத்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனது வாலை நீக்கியுள்ளனர்.

தற்போது சிறுவன் நாற்காலியில் தான் இயங்குவதாக சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுவனின் வால் அகற்றிய பிறகும் சிறுவனை அந்த ஊர் மக்களும் புனித யாத்திரை வரும் பக்கதர்களும் சிறுவனை வணங்கி செல்வது வியப்பாக உள்ளது.

இது பற்றி அந்த சிறுவன் ஆர்சத் அலிகான் கூறுகையில், இந்த வால் நான் பிறக்கும்போது இருந்தது. இது எனக்கு கடவுள் கொடுத்த வரம், பல ஆன்மிக சுற்றுலாவிற்கு வரும் பக்தர்கள் என்னையும் கடவுளின் அவதாரமாக நினைத்து வழிபாடு செய்கின்றனர்.

மேலும், மருத்துவர்கள் என் வாலை நீக்கி விட்டார்கள், ஆனால் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளான்