கூகுளின் Hangouts சேவை

கடந்த 9 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த கூகுள் நிறுவனத்தின் ஜிடால்க் மெசேஜிங் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் கூகுளின் ஹேங்அவுட் இனி ஜிடால்க் சேவையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை Google talk மற்றும் ஹேங்அவுட் சேவைகளுக்கான முகாமையாளர் மயூர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் இதனை Jitsi, Psi, Instantbird, Miranda IM,  போன்ற செயலிகளை கொண்டு பயன்படுத்த முடியும். இந்த சேவைகள் கூகுள் எந்த வகையிலும் பொறுப்பேற்காது, இதனை பயன்படுத்துவது பயனாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியை ஏற்படுத்தவே கூகுள் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. புதிய ஹேங்அவுட் சேவையானது வாடிக்கைiயாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பதோடு இதில் குரல்பதிவு மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.