கனடாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பனிப்புயல் எச்சரிக்கை தீவிரமாகியுள்ள நிலையில், அப்பகுதியின் அரச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சார்லட்டவுன் நகரில் 57 சென்றிமீற்றர் வரையிலான பனிப்பொழிவு காணப்படுவதாக வானிலை ஆய்வாளர் பீட்டர் கோட் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பனிப்பொழிவு உயரும் எனவும் பனிப்புயல் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், வீதிகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் இக்காலநிலை போக்குவரத்திற்கு இடையூறாக விளங்குவதால் காலநிலை சீராகும் வரையில் பொதுமக்களை தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சார்லட்டவுன் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.