இரவில் சிலர் தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு உடனே படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால் இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பார்க்கலாம். இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால் அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும். இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் 35 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால் அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள்.
பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால் இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது. இரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால் அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இது தூக்கத்தைக் கெடுக்கும்