யாழ் நோக்கிய பயணித்த பாரஊர்தி மாடுகளுடன் மோதி தடம்புரண்டுள்ளது

வவனியா கனகராயன்குளம் புதூர் சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதித் தடம்புரண்டது.

இதில் மூன்று மாடுகள் பலியாகியுள்ளன. விபத்து குறித்து கனகராயன்குள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.