அப்பிள் மற்றும் கூகிள் சாதனங்களில் இணையத்தினை பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்கள் ஹக்கர்களின் “குறும்பு தாக்குதல்” காரணமாக பாதிக்கப்படலாம் என புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதுகாப்புக் குறைபாடுகளை ஹக்கர்கள் அறிந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை இல்லை எனினும் குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனங்கள் இப்போது முயற்சி செய்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் பழைய அரசாங்கத்தின் கொள்கைகளே பிரச்சனைக்கு காரணம் என குற்றம்சாடுகின்றனர். அமெரிக்க மென்பொருள் தயாரிப்பாளர்கள் பலவீனமான பாதுகாப்பு முறைமையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பல பிரபலமான வலைத்தளங்கள் மற்றும் சில இணைய உலாவிகள் பலவீனமான மென்பொருளை ஏற்றுக்கொண்டன அல்லது பயன்படுத்தின என்பதை நேற்றைதினம் செவ்வாய்க்கிழமை பல திறமையான ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தகவலின்படி ஹக்கர்கள் எளிதாக பாதுகாப்பு முறைமையை உடைத்து வலைத்தள பார்வையாளர்களின் முக்கிய டிஜிட்டல் தகவல்களை அறிந்துகொள்வதை தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
