அதிக பாதுகாப்பு அளிக்கும் ப்ளாக்போன் 2 அறிமுகம்

ப்ளாக்போன் வகையை சேர்ந்த இரண்டாவது ஸ்மார்ட்போனை சைலன்ட் சர்கிள் நிறுவனம் வெளியிட்டது. மேலும் ப்ளாக்போன்+ என்ற டேப்ளெட்டையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது இந்த டேப்ளெட் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாக இருக்கும் டேப்ளெட்டின் சிறம்பசங்கள் குறித்த எந்த தகவல்களும் இல்லை.

இந்த ப்ளாக்போன் 2 பாதுகாப்பிற்கு முக்கயத்துவம் அளிக்கும் அப்டேட் செய்யப்பட்ட ப்ரைவேட் ஓஎஸ் கொண்டு இயங்குகின்றது இந்த இயங்குதளமும் ஆன்டிராய்டு சார்ந்தது என்பதோடு இதன் வெர்ஷன் 1.1 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளது. மேலும் 64-பிட் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 3ஜிபி ராம் இருப்பதோடு 4ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆகியவற்றுடன் 3060 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

புதிய ப்ளாக்போன் 2 விலை $649 என நிர்ணயக்கப்பட்டுள்ளது ப்ளாக்போன் 2 சந்தையில் எப்பொழுது கிடைக்கும் என்று இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும் ப்ளாக்போன்+ டேப்ளெட் 7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.