ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வாட்ச்சை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதள வசதி கொண்ட இந்த வாட்ச்சில், மொபைல் போன்களுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் குறித்த விவரங்களையும் பெறலாம்.

மேலும் பல நவீன வசதிகளை கொண்ட ஆப்பிள் வாட்ச் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 24ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. ஏப்ரல் 10 தேதி இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. இதன் விலை $350 முதல் $10,000 வரை மாறுபட்ட விலைகளில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.