நேபாளத்தில் இன்று மீண்டும் நிகழ்ந்த சக்தி வாயந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில், அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள சிந்துபால் சவுக் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், சவுதாரா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மேலும் இரு முறை சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
