35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26 வயதான மாலைத்தீவு பிரஜை ஒருவரே இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நாணயங்களை பேங்கொக் நோக்கி கொண்டுசெல்வதற்கு சந்தேகநபர் முயற்சித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
25,000 அமெரிக்க டொலர்களை சந்தேகநபரிடமிருந்து சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாட்டு நாணயங்கள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.