யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயம்

யாழ். அச்சுவெளி ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 04 சிறுவர்களும் காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் நந்தகுமார் தெரிவிக்கின்றார்.

மேலும் 14 பெண்களும் 04 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் நந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த இருவர் அச்சுவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

பருத்திதுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் யாழ் நகரிலிருந்து பருத்திதுறை நோக்கி பயணித்த லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆவரங்கால் பகுதியில் இன்று (12) முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் அச்சுவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.