ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் புதிய எலெக்ட்ரிக் கார் 2019–ம் ஆண்டு அறிமுகம் ஆகிறது. கம்ப்யூட்டர் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் நம்பர் 1 ஆக ‘ஆப்பிள்’ நிறுவனம் விளங்குகிறது. தற்போது இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்பணியில் ஏராளமான என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ‘டைடன்’ என பெயரிடப்பட்டள்ளது.

இக்கார் வருகிற 2019–ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதை ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்யவில்லை. ஆனால் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பல ஆட்டோ மொபைல் மற்றும் பேட்டரி டிசைன் என்ஜினீயர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

கார் மென் பொருள் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும், அதற்கு முன்னோட்டமாக இக் கார் உருவாக்குவதில் தீவிரமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.