12 நிமிடங்களுக்கு செயலிழந்த பேஸ்புக்: தவித்துப்போன பயனாளர்கள்

பேஸ்புக் சமூக வலைதளம் நேற்று 12 நிமிடங்களுக்கு செயலிழந்ததால் இணைய பயனாளர்கள் செய்வதறியாது தவித்துபோனார்கள்.

சமூக வலைதளங்களில் முக்கியமான வலைதளமான பேஸ்புக் நேற்று சரியாக 12 நிமிடங்களுக்கு செயலிழந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.

இதையடுத்து பலரும் தங்கள் துயரத்தை டுவிட்டர்களில் வெளிப்படுத்த துவங்கினர்.

சில நிமிடங்களிலேயே #facebookdown என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிரபலப்படுத்தினர்.

சிலர் உலகம் அழிந்துவிட்டதாக வேடிக்கையாக டுவிட் செய்தனர்.

வட அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய பகுதிகளில் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சில் நிமிடங்களில் பேஸ்புக்கில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இதன் பின்னரே பயனாளர்கள் நிம்மதியடைந்தனர்.