மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

ஹாலிஎல மற்றும் பதுளைக்கு இடையே ரயில் ஒன்று தடம்புரண்டதால் நேற்று பிற்பகல் முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணித்துக்கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலே தடம்புரண்டிருந்தது.

இதனால் பதுளைநோக்கி சென்றுகொண்டிருந்த மற்றுமொரு ரயிலை ஹாலிஎல ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு நேரிட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தடம்புரண்ட ரயில் இன்று அதிகாலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.