உலக அழகி இறுதி போட்டி

அமெரிக்காவில் உலக அழகி பட்டத்திற்கான இறுதி போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. உலக அழகி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 63 வது உலக அழகி போட்டி அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக அழகிகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் அலங்கார வண்டிகளில் பல்வேறு நாட்டு அழகிகளும் ஊர்வலமாக சென்றது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.