சவுதி மன்னர் அப்துல்லா நள்ளிரவு 1 மணியளவில் மறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து அவருக்கு உலகின் பல தலவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரதமர்
நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "சவிதியின் மிகப் பெரிய குரல்
அடங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்
அப்துல்லா. அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழிகாட்டியாக திகழ்ந்த மனிதரை இழந்திருக்கும் சவுதி மக்களின் நிலை வேதனை
அளிக்கிறது" எனவும்
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இரங்கல்
செய்தியில் "இஸ்லாமியர்களிடையே மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தவர்
அப்துல்லா. அவரது துணிவான நடவடிக்கைகளும், மற்ற நாடுகளுடன் அவர் கொண்ட
நட்புறவும் பாராட்டுக்குரியது. அமெரிக்காவுக்கும் சவுதிக்கும் இடையே ஆன
உறவுக்கு அவர் மிகப் பெரிய தூண்டுதலாக திகழ்ந்தார். அவரது மறைவு எனக்கு
வேதனை அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
