மனிதனின் முகம் போல காட்சி தரும் வண்டு

மனிதனின் முகம் போல காட்சி தரும் வண்டு
நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் வித்தியாசமான வண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது.
 
விவசாயி ஒருவருடைய மரக்கறி தோட்டத்திலிருந்தே குறித்த வண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தாடி வைத்த மனிதனின் முகம் போலவும் மறுபக்கம் பார்க்கும் பொழுது சாதாரண மனிதனின் முகம் போலவும் காட்சி தருகின்றது.
 
இது தொடர்ப்பில் விவசாயி குறிப்பிடுகையில்,‘விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவேளையிலே இந்த வண்டினை கண்டெடுத்தேன். இது வரை நான் இவ்வகையான வண்டினத்தை கண்டதில்லை’ என குறிப்பிட்டார்.