இந்தோனேஷியாவிலுள்ள ஒரு வகை கோழிகள் முற்றிலும் கறுப்பு நிறமாக காணப்படுகின்றன\ இதன் தலை முதல் கால் மற்றும் நகம் ஆகிய அனைத்து பகுதிகளும் கறுப்பு நிறமாக உள்ளன. அத்துடன் கண்கள் மற்றும் வாய் ஆகிய பகுதிகளும் கறுப்பு நிறமாகவே உள்ளது.
இக்கோழி இன இறைச்சியின் விலை மிக அதிகமாகும். சுமார் 2,500 அமெரிக்க டொலர் விலைக்கு ஒரு கோழி விற்பனையாகின்றன. இதனை லம்போர்கினி கோழிகள் என மக்கள் அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
