உழவு இயந்திர விபத்தில் இளைஞன் பலி

tractor accidents
அம்பாறை, பொத்துவில் நாவலாறு பகுதியில் உழவு இயந்திரங்கள் இரண்டு குடைசாந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், பொத்துவில் அல்ஹுதா வீதியைச் சேர்ந்த 26 வயதான எஸ்.நுஸ்ரத் அலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பழுதடைந்த ஒரு உழவு இயந்திரத்தை பானமையிலிருந்து பொத்துவிலுக்கு பிறிதொரு உழவு இயந்திரத்திரத்தின் உதவியுடன் கட்டி இழுத்து வரும்போதே இரண்டு உழவு இயந்திரங்களும் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பழுதடைந்த உழவு இயந்திரத்திலிருந்து சாரதிக்கு துணையாக வந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்குறித்த விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.