பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள ஷியா பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஷியா பள்ளிவாசலில் 3 தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், கிரனைட் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஹயாராபாத் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் பொலிஸாருக்கும், ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக பலரும் பள்ளிவாசலில் கூடியிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கவைத்துக் கொண்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மூன்றாவது நபர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிந்த் மாகாணத்திலுள்ள ஷிகர்பூர் மாவட்டத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.