டெல்லி சட்டபேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை புதுடெல்லியின் எட்டாவது முதல்வராக பதவியேற்றுக்கொள்கின்றார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த நான்கு நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வரும் அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சலுக்கு இடையிலும் ஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்தார். இன்றும் காய்ச்சல் தொடர்வதால், இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த கெஜ்ரிவாலின் முக்கிய சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பதையடுத்து டெல்லி ராம் லீலா மைதானம் விழாகோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு கருதி ராம் லீலா மைதானத்தில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி கெமராக்கள் பொருத்தபட்டுள்ளன. இந்நிகழ்வில் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதனால் சுமார் 5000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.