குருணாகல் மாவட்டத்தின் வாரியப்பொல பகுதியிலுள்ள தெதுரு ஓயாவின் நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் மாணவி ஆகிய இருவர் தெதுரு ஓயாவின் நீர்த் தேக்கத்தில் குதிதது தற்கொலைச் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், நேற்று வியாழக்கிழமை மாணவனின் சடலத்தை கண்டெடுத்தனர்.
இந்நிலையில் மாணவியின் சடலம் இன்று காலை 06.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.