இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து, உடனடியாக அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தமது அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் அதிகார சபைக்கும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில், ஒரு லீட்டர் மண்ணெண்ணை ஆறு ரூபாவும், ஒரு கிலோ சீனி 10 ரூபாவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 400 கிராம் நிறையைக் கொண்ட ஒரு பைக்கற் பால்மா 325 ரூபாவுக்கு விற்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை 10 வீதத்தால் குறைத்துள்ளதுடன், ஒரு இறாத்தல் பாணின் விலையையும் ஆறு ரூபாவால் குறைத்துள்ளார்.
ஆனால், இந்த விலைக்குறைப்புக்கள் உடனடியாக நாட்டின் பல பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்ததன் பேரிலேயே, அது குறித்த முறைப்பாடுகளை 1977 என்ற இலக்கத்துக்கு தெரியப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
