டுவிட்டர் நிறுவன குற்றச்சாட்டு

அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ios 8 இயங்குதளத்திலுள்ள குறைபாடுகளினால் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் வலைத்தளம், கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தக் கூடியதாக அப்பிளிக்கேஷன்களை கொண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ios 8 இயங்குதளத்தினை கொண்ட போன்களில் இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாதம் ஒன்றிற்கு 292 மில்லியன் பயனாளர்களை கைத் தொலைபேசியூடாக மாத்திரம் எதிர்பார்த்திருந்த டுவிட்டர் நிறுவனம் தற்போது 288 மில்லியன் பயனாளர்களை மாத்திரமே பெறக் கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு தமது 4 மில்லியன் பயனாளர்களை தாம் இழப்பதற்கு அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ios 8 இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.