பிரான்ஸ் ஓவியர் Gauguin வரைந்த இரண்டு தாஹித்தியன் பெண் பிள்ளைகளின் ஓவியம், 300 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் என்ற சாதனையை படைத்துள்ளது.
Nafea Faa Ipoipo அல்லது எப்பொழுது நீ திருமணம் செய்வாய்? என்ற இந்த ஓவியம் 1892ஆம் ஆண்டு வரையப்பட்டதாகும். இதனை சுவிட்ஸர்லாந்து சேகரிப்பாளர் ஒருவர் வைத்திருந்தார்.
இந்த ஓவியம் கட்டாரில் இருக்கும் அருங்காட்சியகம் ஒன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பும் Paul Cezanne என்பவர் வரைந்திருந்த ஓவியம் ஒன்றை 259 மில்லியன் டொலர்களுக்கு எண்ணெய் வளம் மிக்க நாடான கட்டார் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
