இலங்கைக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பினை இன்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வருகைக்கான உத்தேச திகதி குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த வருடம், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
