ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் பொதுவாக அதிக நாட்கள் உயிரோடு இருப்பதில்லை. அப்படியே உயிரோடு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கப்படுவார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் Beavercreek என்ற நகரத்தை சேர்ந்த ஒரு இரட்டையர்கள் கடந்த 63 வருடங்களாக உடல் ஒட்டிய நிலையில் வாழ்ந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள Beavercreek என்ற நகரைத்தை சேர்ந்த Ronnie மற்றும் Donnie Galyon ஆகிய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சமீபத்தில் தங்களுடைய 63வது பிறந்த நாளை கொண்டாடினர். இதன்மூலம் அதிக நாட்கள் வாழ்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற பெருமையை இவர்கள் அடைந்துள்ளனர்.