நிர்வாண கோலத்தில் வீதியில் நின்ற பெண் கைது

பர­ப­ரப்­பான வீதி­யொன்றில் பெண்­ணொ­ருவர் நிர்­வாண கோலத்தில் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­கா­விலன் புளோ­ரிடா மாநி­லத்தில் கடந்த ஞாயி­றன்று இடம்­பெற்­றுள்­ளது.

31 வய­தான எமி கார்ட்டர் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். இவர் கடந்த ஞாயி­றன்று இரவு ஒர்­லண்டோ நகரின் குடி­யி­ருப்பு பகு­தி­யொன்­றி­லுள்ள வீதியில் நிர்­வாண கோலத்தில் நடந்து திரிந்­த­துடன், தம்­ப­தி­யொ­ருவர் பயணம் செய்த காரின் மீது பல­வந்­த­மாக ஏறி பாலியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பின்னால் நின்ற வாக­னத்தின் மீது செல்­லிடத் தொலை­பே­சி­யையும் இவர் வீசி­யெ­றிந்தார். பின்னர் பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­ட­தை­யடுத்து பொலிஸார் அங்கு விரைந்­தனர்.

எமி கார்ட்­டரை பொலிஸார் கைது செய்ய முயற்­சித்­த­போது எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கால்­களை மேலே தூக்கி உத­றி­ய­துடன் பொலிஸார் மீது பொரு­ளொன்­றையும் வீசி­ய­தாக பொலிஸார் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

எனினும் அவரை காரின் மேல் இருந்து இறக்­கிய பொலிஸார்  கைவிலங்கிட்டு, போர்வையொன்றை அவர் மீது போர்த்தி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.