இங்கிலாந்து வொல்வர் ஹம்டன் பகுதியில் காணப்பட்ட புனித அல்பன் தேவாலயத்தினால் நடத்தப்பட்ட முன் பள்ளியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து எதுவித உயிராபத்தும் இன்றி பாரிய சிரமத்தின் மத்தியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3 வயதிலிருந்து 11 வயது வரையான 177 மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் திடீரென தீ பரவியதால் அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 8 பேர் அடங்கிய தீயணைப்புக் குழுவொன்று பாரிய சிரமத்தின் மத்தியில் பல மணிநேரங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை குறித்த முன்பள்ளி மூடப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.