இந்தோனேசிய ஜனாதிபதி மலேசியா விஜயம்

மலேசிய மன்னர் Tuanku Abdul Halim Mu’adzam Shah  வின் அழைப்பை ஏற்று நேற்று வியாழக்கிழமை இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ, அவரது மனைவி இரியானா ஜொகோ விடோடோ மற்றும் இந்தோனேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை வந்தடைந்தனர்.

இந்நிலையில், சேபங் விமானநிலையத்தை வந்தடைந்த இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அவரது மனைவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மலேசிய பிரதிநிதிகள் நேரில் வருகை தந்து வரவேற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை ஜொகோ விடோடோவிற்கும் மலேசிய பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மேலும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஜொகோ விடோடோ மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.