மரதன் ஓடிய மாணவன் திடீர் மரணம்

நீண்டதூர மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று அம்பலாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பலாந்தோட்டை பொலான மகா வித்தியாலயத்தில் 10 ஆண்டில் கல்வி பயிலும் 15 வயது நிரம்பிய மாணவவே இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளான்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு கொண்ட போது கீழே விழுந்த மாணவன் அம்பலாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.