அதிரடி படங்களுக்கு (Action Film) பிரான்ஸில் தடை

அதிரடி படங்களில் (Action Film) வரும் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்தே அங்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சீருடை அணிந்து தீவிரவாதிகளை தாக்குவது போன்ற காட்சிகளினால் பிரச்சினைகள் இருப்பதாக பொலிஸ் தளபதி Sylvie Barnaud  தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் இவ்வாறான காட்சிகளினால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் அச்சமான ஒரு சூழ்நிலை காணப்படுவதனால் அங்கு போலி ஆயுதங்கள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.