எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் ஹாபீஸ் நசீர்!

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட், இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் வைபவம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.