மங்களூரிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி ஓடு பாதையில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. முன்னதாக ஏர் இந்தியா விமானம் ஒன்று 7 சிப்பந்திகல் உட்பட 194 பேருடன், கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து மும்பைக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளம்பி, மும்பையில் தரையிறங்கும் போது அதன் வால்பகுதி ஓடுதளத்தில் மோதியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானிகள் இருவரும் விமானத்தை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானிகள் இருவரும் விமானத்தை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது