கையடக்க தொலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இலவச அடிப்படை இணைய சேவையை சமூக வலைத்தளமான பேஸ்புக், இந்திய ரிலயன்ஸ் கொமியுனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கவுள்ளது.
இந்தியாவிலுள்ள 22 பிராந்தியத்தின் 7 பிராந்தியங்களுக்கு முதல்கட்டமாக இந்த பயன்பாட்டை வழங்க இந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதனை தொடர்ந்து சுமார் 90 நாட்களின் பின்னர் இந்த சேவையை நாடு முழுவதும் செயற்படுத்தவுள்ளதாக ரிலயன்ஸ் நுகர்வோர் வர்த்தக தலைமை அதிகாரி குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மற்றும் கிராமப்புற பகுதிகளை இலக்கு வைத்து இந்த இலவச இணைய சேவை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம், தொழில்வாய்ப்பு, விவசாய தகவல்கள், சுகாதாரம் மற்றும் கல்வி தளங்களை ஏழு பிராந்திய மொழிகளில் பயனர்கள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் சந்தையாக இந்தியா காணப்படுகின்றது. எனினும், இணைய பாவனை இந்தியாவில் 20 வீதமே காணப்படுகின்றது. பில்லியனுக்கு அதிகமான மக்கள் இணைய வசதியின்றி காணப்படுகின்றனர். இந்நிலையில், இணைய பாவனைக்கான தடையை அகற்ற கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ரிலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து போராடி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
மேலும், உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற iவெநசநெவ.ழசப என்ற பிரமாண்ட திட்டத்தை பேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த இலவச இணைய வசதி வழங்கப்பட்டு வருகின்றது.