போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதனை தடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறுகையில், போதைப் பொருள் கடத்தலை தடுக்க முன்னைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் சில காரணங்களால் அதனை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நீண்ட காலமாக மக்களையும் நாட்டையும் பிரச்சினைக்கு உட்படுத்தி வந்த போதைப் பொருள் கடத்தலுக்கு புதிய அரசு தீர்வு வழங்கும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.