கடலில் வீழ்ந்து மூழ்கிக்கொண்டிருந்த காரொன்றின் கண்ணாடியை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கருங்கல்லினால் உடைத்து, அக்காருக்குள் சிக்கித் தவித்த பெண்ணை மீட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் வெய்டெமெட்டா துறைமுகத்துக்கு அருகிலுள்ள வீதியில் 63 வயதான பெண்ணொருவர் செலுத்திச் சென்ற கார் பாதையைவிட்டு விலகி துறைமுக கடற்பகுதிக்குள் வீழ்ந்தது.
காரைவிட்டு வெளிவர முடியாமல் அப்பெண் தவித்துக்கொண்டிருக்க, அந்த பி.எம்.டபிள்யூ. படிப்படியாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.
சாரதி ஆசனத்தைவிட்டு பின் ஆசனத்துக்கு தவழ்ந்து வந்த அப்பெண், கண்ணாடியை தட்டி உதவி கோரினார்.
இதை அவதானித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீரில் குதித்து அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களால் காரின் கதவை திறக்க முடியவில்லை. பொலிஸார் பயன்படுத்தும் குண்டாந்தடியினால் காரின் கண்ணாடியை உடைக்க முடியவில்லை. இறுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் போல் வட்ஸ், பாரிய கல் ஒன்றினால் கண்ணாடியை உடைத்து அப்பெண்ணை மீட்க வழிவகுத்தார்.
அதற்குமுன் தன்னை காப்பாற்றுவார்களா எனத் தெரியாமல் மிகவும் பீதியடைந்த நிலையில் அப்பெண்காணப்பட்டார்.
சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் மேலும் ஒரு நிமிடத்துக்குப் போதுமான வளியே காருக்குள் இருந்தது. அத்துடன் அப்பெண்ணை வெளியே எடுத்து 40 விநாடிகளில் அக்கார் மேலும் நீருக்குள் சென்றுவிட்டதாக மேற்படி கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
இக் கார் கடலில் எவ்வாறு வீழ்ந்தது என்பது தொடர் பாக நியூஸிலாந்து பொலிஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.