பனி மனிதன் உருவாக்கத்தில் ஜப்பானிய நகரம் சாதனை

ஜப்­பா­னி­லுள்ள சிறிய நக­ர­மொன்று, பனி­ம­னிதன் உரு­வாக்­கு­வதில் புதிய உலக சாதனை படைத்­துள்­ளது.

 லியாமா எனும் இந்­ந­கரில் கடந்த திங்­க­ளன்று ஒரு மணித்­தி­யா­லத்தில் 1585 பனி­ம­னிதன் சிற்­பங்­களை உரு­வாக்­கி­ய­தாக அந்­ந­கரின் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

சிறார்கள் உட்­பட சுமார் 600 பேர் இணைந்து தலா 3 அடி உய­ர­மான இப்­ப­னி­ம­னித சிற்­பங்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

2011 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் ஒரு மணித்­தி­யா­லத்தில் 306 பனி­ம­னி­தர்­களை செய்து படைக்­கப்­பட்­டி­ருந்த சாதனை ஜப்­பானின் லியாமா நகர மக்­களால் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கின்னஸ் சாத­னை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக இப்­ப­னி­ம­னிதன் சிற்­பங்கள் முகத்தின் அங்­கங்கள், கைகள் ஆகி­ய­வற்றை கொண்­ட­தாக அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இம்­முறை ஜப்­பானின் பல நக­ரங்­களில் அதிக பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டது.

 ஹொக்கெய்டோ எனும் நகரில் 180 சென்ரிமீற்றர் அளவு பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.