வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் டெங்கு நுளம்பு பெருகும் இடம் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இன்று விசேட வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை. விசேட அதிரடிப்படை, பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இப்பணியில் வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள வடிகான்களுக்குள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவ்விடங்கள் துப்பரவு செய்யப்பட்டிருந்தன.
நடைபாதை வியாபாரிகள் பயன்படுத்தும் பொலித்தீன்கள் வடிகான்களுக்கள் தேங்கிக் கிடப்பதனாலேயே நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வடிகான்களை மூடி அமைக்கப்பட்ட சீமெந்து தூர்களும் அகற்றப்பட்டு வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.
