ரஷ்ய குழந்தைக்கு சென்னையில் இதய மாற்று சிகிச்சை

hard-operation-hospital
இரண்டு வயது ரஷ்ய குழந்தைக்கு சென்னை மலர் வைத்தியசாலையில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதயக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு வயது ரஷ்ய குழந்தைக்கு மிகவும் அபாயகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என அக்குழந்தையை பரிசோதித்த மலர் வைத்தியசாலை மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரில் இரண்டு வயது குழந்தை இறந்தது தெரிய வரவே மருத்துவர்கள் அங்கு விரைந்து பெற்றோர் சம்மதத்துடன் அக்குழந்தையின் இதயத்தை ரஷ்ய குழந்தைக்கு பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

இது குறித்து மலர் வைத்தியசாலை மருத்துவர் சுரேஷ் ராவ் கூறும் போது, பெங்களுர் மனிப்பால் வைத்தியசாலையில் இறந்த குழந்தையின் இதயம் ஒரு மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ரஷ்ய குழந்தைக்கு நடைபெற்ற ஒரு மணிநேர அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் தற்பொழுது அக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.