வெளிநாட்டு மதுவுடன் புத்தளத்தில் ஒருவர் கைது


வெளிநாட்டு மதுவுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

புத்தளம் மாவட்டத்தின் சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 28 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினம் மதுபானசாலைகள் மூடப்படவுள்ள நிலையில், குறித்த தினங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே சந்தேக நபர் இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றிருக்கலாமென சாலியவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சொகுசு கார் ஒன்றிலேயே இந்த மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இதற்கு முன்னரும் இதே காரில் சந்தேக நபர் கஞ்சா கொண்டு சென்றதாகவும் அப்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கார் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர் மீதான விசாரணைகளையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.