இரு நிறுவனங்களை வாங்கிய பேஸ்புக்

தொழில்நுட்பத்தில் புதிய கண்டு பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இவ்வேளையில் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், சமூக வலைப்பின்னலில் தற்பொழுது பிரபலமடைந்திருக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தினை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்காக சுமார் 19 பில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்நிறுவனம், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தையும் சுமார் 1 பில்லியன் டொலர்களை கொடுத்து வாங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த 2011ஆம் ஆண்டு 8.56 டொலர்களுக்கு ஸ்கைப் நிறுவனத்தையும், 2013ஆம் ஆண்டு 7.2 பில்லியன் டொலர்களுக்கு முன்னணி கையடக்க தொலைபேசி நிறுவனமான நோக்கியா நிறுவனத்தையும் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.