பேஸ்புக்கில் இருக்கும் பயனாளர்களின் போட்டோ ஆல்பங்களை யார் வேண்டுமானாலும் அழிக்கும் நிலை சில நாட்களுக்கு முன்பு வரை இருந்து வந்தது.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷமன் முத்தையா மூலம் அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதற்கு பேஸ்புக் நிறுவனம் முத்தையாவிற்கு சுமார் 12,500 அமெரிக்க டொலர்களை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
பிழையை மின்னஞ்சல் மூலம் தெரிவித்த முத்தையாவிற்கு அதே நாள் பேஸ்புக் தரப்பில் இருந்து பதில் கிடைத்தது. அதில் நீங்கள் கண்டறிந்த பிரச்சனையை ஆய்வு செய்து விட்டோம். இதனால் பேஸ்புக் தரப்பில் இருந்து உங்களுக்கு பரிசு தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை பேஸ்புக் நிறுவனம் சார்பில் சுமார் 329 பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் கோவையை சேர்ந்த அருள் குமாருக்கும் 12,500 அமெரிக்க டொலர் பரிசு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை பேஸ்புக்கினால் அதிகபட்சமாக 20,000 அமெரிக்க டொலர்கள் வரை பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
