மணமகளின் பெயரை மறந்த மணமகனுக்கு சிறைத்தண்டனை

பிரிட்­டனில் திரு­மணப் பதி­வின்­போது தனது மண­ப்பெண்ணின் பெயரை மறந்த மண­மகன்  சிறை­யி­ல­டைக்­கப்­பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிர­ஜை­யான ஸுபைர் கான் (28) என்­பவர் பிரிட்­டனில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருப்­ப­தற்­காக அங்­குள்ள பெண்­ணொ­ரு­வரை போலி­யாக திரு­மணம் செய்­து­கொள்ளத் திட்­ட­மிட்டுள்ளார்.

ஹங்­கே­ரி­யி­லி­ருந்து பிரிட்­டனில் குடி­யே­றிய பீட்டா ஸிலாகி எனும் 33 வய­தான யுவதி இப்­போலி திரு­ம­ணத்­துக்கு ஒப்­புக்­கொண்டார்.

எனவே, இப்­பெண்ணை திரு­மணம் செய்­து­ கொண்­ட­தாக காட்­டிக்­கொள்­வதன் மூலம் தனக்கு பிரித்­தா­னிய பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும் என ஸுபைர் கான் எதிர்­பார்த்துள்ளார்.

ஆனால், இப்­போலி திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தித்த பெண்ணின் பெயர் ஸுபைர் கானுக்கு நினைவில் இல்லை. அதனால், திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் வைத்து மண­ம­களின் பெயரை அறி­வ­தற்­காக இத்­தி­ரு­மண ஏற்­பாட்­டாளரை தொலை­பேசி மூலம் அழைத்துள்ளார்.

இதனால் திரு­மணப் பதிவு அதி­கா­ரிக்கு சந்­தேகம் ஏற்­படவே அவர் பிரித்­தா­னிய உள்­துறை அமைச்­சக அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது தொடர்­பான விசா­ர­ணை­யின்­போது தாம் போலி திரு­ம­ண­மொன்றை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டதை ஸுபைர் கானும் பீட்டா ஸிலி­கியும் ஒப்­புக்­கொண்­டனர்.

அதை­ய­டுத்து இவ்­வி­ரு­வருக்கும் முறையே 20 மற்றும் 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாட்டாளரான காலிக் கான் என்பவருக்கும் 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.