இங்கிலாந்தில் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி
இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வழமையை விட இந்த அதிகரிப்பானது ஒன்றிற்கு மூன்று என அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மாத இறுதிக்குள் 28000 பேர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதேவேளை கடந்த ஐந்து வருடங்களுக்கு காணப்பட்ட உயிரிழப்பின் சராசரி அளவு ஏறத்தாழ 21000 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாறு காய்ச்சல் பரவுவது குளிர் காலப்பகுதியில் என்று குறிப்பிட்டுள்ள சுகாதார நிபுணர்கள், இந்த காய்ச்சல் அதிகளவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களையே தாக்குவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறான உயிரிழப்புக்களைத் தடுக்கும் வழிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.