திருடனால் கிடைத்த அதிர்ஷ்டம்.

பிரித்தானியாவில் திருடனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், கோடீஸ்வரனான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடக்கு டினிசைட் கவுன்டியை (Denicite county)சேர்ந்த ஆலன் பர்னஸ் (Alan Barnes Age-67) என்ற நபர் பார்வை மற்றும் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்தவர்.

கடந்த 28ம் திகதி இவரை தாக்கிய மர்ம நபர் ஒருவன், இவரிடம் பணமில்லை என்பதை அறிந்தவுடன், கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளான்.

இதனால் கழுத்து எலும்பு உடைந்து கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகை ஒன்று அவரிடம் பேட்டி எடுத்ததையடுத்து, இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிந்த அனைவரும் அவரது நிலைமையை நினைத்து வருந்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆலனுக்கு உதவும் நோக்குடன் கேத்தி கட்லர்(Katie Cutler)எனும் பெண் இணையதளத்தில் "ஆலன் பர்னஸ் பண்ட்" (Alan Barnes Fund)என்ற பக்கத்தை தொடங்கியுள்ளார்.

இந்த பக்கம் தொடங்கிய நான்கு நாட்களிலேயே, ஆலனுக்கு 2,75,0000 பவுண்டுகள் (2.5 கோடி) நிதி கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆலன் கூறுகையில், இது போன்ற சம்பவம் யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் நான் அந்த பேட்டியை கொடுத்தேன்.

ஆனால் இந்த நிதி உதவியையும், இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.