காதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஐபோனை வெளியிட்டுள்ளதாக கோல்ட்ஜேனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் மற்றும் மஞ்சள், ரோஸ் தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய அனைத்து வைரங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஐபோன்களின் விலை 10 லட்சத்திலிருந்து 22 லட்சம் வரை செல்கின்றது. அதில் பொருத்தப்பட்டிருக்கும் வைரங்களுக்கு ஏற்றவாரு அதன் விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
மேலும் வாடிக்கையாளருக்கு ஏற்றவாறு ஐபோனில் வைரங்களை பொருத்த முடியும் என்று கோல்ட்ஜேனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காதலர் தினத்தில் அதிக விலை மதிப்புள்ள பரிசில்களை தமது காதலர்களுக்கு வழங்க விரும்புவோர் இம்முறை தங்கம், வைரம் பொருத்தப்பட்ட ஐபோன் 6 ஐ கொள்வனவு செய்வார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
